சென்னை: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக அமையட்டும்.” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உத்வேகம் தரும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “கடந்த டிசம்பர் மாதத்தில் நம் அனைவரின் அன்பிற்குரிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர், தந்தை பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அதிர்ச்சி தரத்தக்க மரணத்தால் இந்த இடைத்தேர்தல் களத்தைச் சந்திக்கின்றோம். இந்த முறை ஈரோடு கிழக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார்.