ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க முத்தரசன் வேண்டுகோள்

2 hours ago 1

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் அனைவரும் திமுகழக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாளை மறுநாள் (05.02.2025) வாக்குப்பதிவு நடை பெறுகிறது. தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

Read Entire Article