ஈரோடு/சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின்போது, பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அமைச்சர் முத்துசாமியை வாக்காளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி தலைமையிலான திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.