ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. விடுமுறை தினங்களை தவிர்த்து கடந்த 10 மற்றும் 13-ந்தேதி என 2 நாட்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த 2 நாட்களில் 9 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. இதையொட்டி இன்று பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பாகும். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனு வாபஸ் பெற வருகிற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.