ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவே பெரியார் குறித்து அவதூறு பேச்சு: திருமாவளவன் குற்றச்சாட்டு

19 hours ago 2

சென்னை: சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெரியார் தமிழை அவதூறாக பேசினார் என்று கூறுகிறார்கள். அவர் தமிழை அப்படி கூறவில்லை. பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பேசினார் என்றால் அவர் தமிழை இழிவுபடுத்தவில்லை. தமிழில் புராணங்கள் உள்ளன. அதைத்தான் எதிர்த்தார். இந்து மதத்தை மட்டும் விமர்சித்தார் என்று‌ குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அவர்‌ இந்து மதத்தை சேர்ந்தவர். அதனால் வேறு மதத்தை விமர்சிக்க முடியாது. இந்து மதத்தில் பாகுபாடு உள்ளது. பிறப்பால் சாதி பாகுபாடு. ஆண் பெண் பாகுபாடு இருக்கிறது. சமத்துவம் இல்லை.

விடுதலை சிறுத்தைகள் கொடி ஏற்றினால் கொடியை பிடுங்கிபோடு என்கிறார் ராமதாஸ். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லை என்பதை எதிர்ப்பு தெரிவித்து போராட முனைப்பு காட்டி இருக்கிறாரா? பாஜ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவார்கள். ஈரோடு இடைத்தேர்தலை மனதில் வைத்து பேசுகிறார்கள். பாஜ ஆதரவாளர்கள் எல்லாம் வாக்கு போட வேண்டும் என்பதற்காக பெரியாரை விமர்சித்து பேசுகிறார்கள். பாஜ ஓட்டு வேண்டும். அதிமுக நிற்கவில்லை. அந்த ஓட்டு வேண்டும். பாஜ- அதிமுக ஓட்டு போடும் நபர்கள் தற்போது அந்த கட்சிகள் நிற்காததால் திமுகவுக்கு போட மாட்டார்கள் என்ற காரணத்தால் அந்த வாக்குகளை பெறுவதற்காக பெரியாரை விமர்சித்து பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவே பெரியார் குறித்து அவதூறு பேச்சு: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article