ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? ஓபிஎஸ் பதில்

5 months ago 34

மதுரை, 

மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளிடம் கலந்துபேசி முடிவெடுப்போம். திமுகவை பொறுத்தவரை சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ஒரு பேச்சும், அதற்கு பின்பு ஒரு பேச்சுமாக இருப்பது அவர்களுக்கு வாடிக்கையானது.

டங்ஸ்டன் சுரங்கம் குறித்து முதலில் குரல் கொடுத்தவர்கள், அதிமுக உரிமை மீட்புக்குழு ஆகிய நாங்கள் தான்.மாணவியை பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் தெய்வம் நின்று கேட்கும் அப்போது அந்த சார் யார் என்பது அனைவருக்கும் தெரியும்," என்றார்.

Read Entire Article