ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களிக்க பயன்படும் ஆவணங்கள் என்ன? - தேர்தல் ஆணையம் பட்டியல்

4 months ago 19

சென்னை: நடைபெறவிருக்கின்ற ஈரோடு இடைத் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை விவரம்: நடைபெறவிருக்கின்ற, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article