திண்டுக்கல்,
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடுகிறது. அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. 55 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. யாருக்கும் ஆதரவில்லை... வாக்களிப்போம். ஆனால் யாருக்கு என்பது ரகசியம்" என்று கூறினார்.