ஈரோடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள் 3 பேர் பள்ளியிலிருந்து நீக்கம்

2 months ago 11
ஈரோடு அருகே செட்டிப்பாளையத்தில் இயங்கிவரும் ஜெய்சீஸ் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே பள்ளியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் தேதி மின்னஞ்சலில் வந்த மிரட்டல் குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தியதில் தேர்வு எழுதுவதில் இருந்து தப்பிக்க மாணவர்கள் மிரட்டல் விடுத்து தெரியவந்துள்ளது. தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ள மாணவர்களில் 2 பேர் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இதேபோன்று மிரட்டல் விடுத்ததால் பள்ளி நிர்வாகம் அவர்களை கண்டித்து எச்சரித்ததாக கூறப்படுகிறது.
Read Entire Article