ஈரான்: ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 14 பேர் பலி ஆகியுள்ளனர். 700 பேர் காயம் அடைந்துள்ளனர். ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து மற்றும் தீ விபத்தில் 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரான் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
துறைமுகத்தில் கண்டெய்னர் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர் வெடி விபத்து அதிர்வலையானது பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக துறைமுகத்தில் ஒரு அதிகளவு கரும்புகை காணப்பட்டது.
கண்டெய்னரில் இருந்த தீப்பற்றக்கூடிய பொருள் வெடித்துச் சிதறியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தை தொடர்ந்து அருகில் இருந்த வாகனங்கள் பற்றி எரிந்ததால் பதற்றம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஈரான் வெடி விபத்தில் 14 பேர் பலி: 750க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.