ஈரானில், கொடுங்கோலர்களின் ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் : இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு

2 months ago 19
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, ஈரானில் கொடுங்கோலர்களின் ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றார். காஸாவையும், லெபனானையும் பாதுகாக்கப்போவதாக சூளுரைக்கும் ஈரான் ஆட்சியாளர்கள், தங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தாமல் அனைத்து வளங்களையும் யுத்தங்களுக்காக செலவிடுவதாக நேதன்யாஹு குற்றம்சாட்டினார். மத்திய கிழக்கில், இஸ்ரேல் ராணுவத்தால் தாக்குதல் நடத்த முடியாத இடமே இல்லை என தெரிவித்த நேதன்யாஹு, ஈரானில், சர்வாதிகார ஆட்சி வீழ்ந்தபின், இஸ்ரேலியர்களும், ஈரானியர்களும் அமைதியாக வாழலாம் என்றார்.
Read Entire Article