ஈராக் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், ஏராளமான தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகரமயமாக்கலின் விளைவாக காடு அழிப்புக்கு எதிரான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இப்பணியை முன்னெடுத்துள்ளனர். பாலைவனப் பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளுக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ண்ணீர்ப் பற்றாக்குறை, வறட்சி, தீவிர வெப்பநிலை போன்ற காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஈராக்கும் ஒன்று என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில், ஈராக்கின் டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளில் நீர்மட்டம் சமீப ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது.
அத்துடன், மழைக்குறைவால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.