ஈசிஆர் சாலையில் நடுரோட்டில் காரை நிறுத்தி பெண்களை துரத்திய இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

1 week ago 2

சென்னை,

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒருகாரில் ஈசிஆர் சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை திமுக கட்சிக்கொடி பொறுத்திய காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.

இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்தது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   


சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!

ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,
சட்டம் இருக்கிறதா?
காவல்துறை… pic.twitter.com/Z03hAuRLml

— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) January 29, 2025

 

Read Entire Article