சென்னை: மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 3 நாள் மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வரும் 10ம் தேதி முதல் 12ம் ேததி (12.7.2025) வரை நடைபெற உள்ளது. ஈக்காட்டுத்தாங்கல் இடிஐஐ வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி நடக்கிறது.
இந்த பயிற்சியில் மின்சார வாகன தொழில்நுட்பத்தை தெளிவாக புரிந்துகொள்ளும் வகையிலும், மோட்டார், பேட்டரி, கட்டுப்பாட்டி, சார்ஜிங் அமைப்புகள் இயக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சர்வீசிங் முறைகள் மற்றும் அடிப்படை கோளாறுகளை கண்டறியும் திறன், இவி டீலர்ஷிப், பழுது சரிசெய்தல் நிலையங்கள் மற்றும் பிராஞ்சைஸி தொழில் மாடல்களை செயல்படுத்தப்படுவது, மின்சார வாகனத் துறையில் கிடைக்கும் அரசுத் திட்டங்கள் மற்றும் ஊக்கத் தொகைகள் குறித்து வழிகாட்டல் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளமுடியும். இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள 9543773337, 9360221280 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஈக்காட்டுத்தாங்கலில் மின் வாகன தொழில் நுட்பம் தொழில்முனைவோர் பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.