சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ெவளியிட்ட அறிக்கை: வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முழுமனதுடன் வரவேற்கிறது. அரசியல் சட்டத்தை நொறுக்கிக் கொண்டிருக்கும் பாசிச பாஜ அரசின் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதியாக தடுத்து நிறுத்தும் என்று நம்புகிறோம். இந்தியா கூட்டணிக் கட்சிகளும் இஸ்லாமிய மக்களின் பாதுகாப்புக்காக எப்போதும் துணை நிற்பார்கள்.
The post இஸ்லாமிய எதிர்ப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தும்: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.