இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

2 hours ago 3

சென்னை,

விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப அறிவு பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிடப்பட்டது. தலா 220 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தியநிலையில், விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களையும் இணைய வைக்கும் சோதனையில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது.

இந்த சூழலில் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்நிலையில் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றிபெற்றதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகரமான செயல் விளக்கத்திற்காக இஸ்ரோ குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி இந்தியாவிற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், ஏனெனில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவிற்குப் பிறகு விண்வெளியில் இணைக்கும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நான்காவது நாடாக இது திகழ்கிறது. இந்த மகத்தான சாதனையை அடைய கடுமையாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  


Heartfelt appreciation to team @isro for the historic successful demonstration of space docking of satellites.

The victorious #SPADExMission is a moment of great pride for India, as it becomes the fourth country after the USA, Russia, and China to master in-space docking… pic.twitter.com/zUG2pirDzJ

— K.Annamalai (@annamalai_k) January 16, 2025


Read Entire Article