அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 20 காளைகளை பிடித்த வீரருக்கு முதல் பரிசு

3 hours ago 3

மதுரை,

உலக மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆயிரம் காளைகள் களம் கண்டுள்ளன. இன்று நடைபெற்ற போட்டியில் பூவந்தியை சேர்ந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் 20 காளைகளை பிடித்து முதல் பரிசை வென்றார். அவருக்கு கார் மற்றும் கன்றுடன் பசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

பொதும்பு ஸ்ரீதர் 13 காளைகளை பிடித்து 2-வது பரிசை வென்றார். அவருக்கு ஷேர் ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது. மடப்புரம் விக்னேஷ் 10 காளைகளை பிடித்து 3-வது பரிசை வென்றார். அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட பாகுபலி காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. காளை உரிமையாளர் வக்கீல் பார்த்தசாரதிக்கு சிறந்த காளைக்கான 2-ம் பரிசாக பைக் வழங்கப்பட்டது. தாய்ப்பட்டி கண்ணனின் காளைக்கு சிறந்த காளைக்கான 3-ம் பரிசாக எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட்டது. 

Read Entire Article