இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் காலமானார்..!!

6 hours ago 1

பெங்களூரு: பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக காலமானார். மறைந்த கஸ்தூரி ரங்கன் 1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பணியாற்றினார். இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர். 2003 முதல் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். பத்ம விபூஷண் விருது பெற்றவர்.கஸ்தூரி ரங்கன் தலைமையில் உருவாக்கப்பட்ட வரைவுக் குழுவின் பரிந்துரைகளின் படியே புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழு விரிவான அறிக்கை சமர்ப்பித்தது. இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்தபோது அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டு அவருக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் காலமானார்..!! appeared first on Dinakaran.

Read Entire Article