இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா அமைப்பினருக்கும் நீண்ட காலமாக சண்டை நீடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 பேரைக் கொன்றனர். மேலும் 250 பேரை பணயக் கைதிகளாக கடத்திச் சென்றனர். அவர்களில், 100 பேர் இன்னும் காசாவிற்குள் இருப்பதாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கோபம் அடைந்த இஸ்ரேல், காசா மீது போர் தொடுத்தது. கடந்த 15 மாதங்களாக நடந்து வரும் போரில், ஹமாஸ் உட்பட இதுவரை 46 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் உடல்கள் இடிபாடுகளிலும், மண்ணுக்கு அடியில் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.