இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல்: ஜோ பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு

4 months ago 32
அமெரிக்க அதிபராகத் தாம் இருந்திருந்தால், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் நடத்திருக்காது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் தொடர்பாக, புளோரிடாவில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், இஸ்ரேல் மீதான தாக்குதல், அமெரிக்கா மீதான செப்டம்பர் 9 தாக்குதலுக்குப் பிறகு மனித குலத்துக்கு எதிரான மிகப் பயங்கரமான, கொடூரமான தாக்குதல் என்றார். இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது அவர் குற்றம் சாட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அனைத்து வகையான உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்றும்,இஸ்ரேல் அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அச்சுறுத்தலையும் அனுமதிக்காது என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
Read Entire Article