இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் எதிரொலி; செங்கடல் வழியாக கப்பல் இயக்கத்தை துவங்க வேண்டும்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

2 hours ago 1

திருப்பூர்: இஸ்ரேல், ஹமாஸ் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் செங்கடல் சூயஸ் கால்வாய் வழியாக சரக்கு போக்குவரத்தை துவங்கினால் செலவினங்கள் வெகுவாக குறையும் என்பது திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் கருத்தாக உள்ளது. தொழில் நகரான திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கே அதிகளவில்ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு கடல் சார்ந்த போக்குவரத்தையே இவர்கள் அதிகம் நம்பி உள்ளனர்.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கன்டைனர் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகளை அனுப்பி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல், ஹமாஸ் இடையே நீடித்த போர் காரணமாக ஆப்பிரிக்கா வழியாக சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் உற்பத்தி செலவு அதிகமாவதுடன் கால விரயமும் ஏற்படுவதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஈரான் ஆதரவு படைகளான இஸ்புல்லா அமைப்பினர் செங்கடலிலும் ஹவுதி படையினர் ஹேமன் வளைகுடா கடல் பகுதியிலும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியும், சிறைபிடித்தும் வந்தனர்.

இதனால் முன்னணி நிறுவனங்கள் செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக சரக்குக்கப்பல் போக்குவரத்தை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் செங்கடல் சூயஸ் கால்வாய் வழியாக சரக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.40,000 கோடி வரை ஏற்றுமதி இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதற்கு செங்கடல் சூயஸ் கால்வாய் வழியாக சரக்கு போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பது இவர்களது ஆதங்கமாக உள்ளது.

The post இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் எதிரொலி; செங்கடல் வழியாக கப்பல் இயக்கத்தை துவங்க வேண்டும்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article