டெய்ர் அல் பலாஹ்: காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 மருத்துவர்கள், அவசரகால உதவியாளர்கள் பலியாகி உள்ளனர். காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கின்றது. இந்நிலையில் இஸ்ரேல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்களின் வாகனங்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ரெட் கிரசண்ட் ஊழியர்கள் 8 பேர், பாதுகாப்பு அவசரப்பிரிவை சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் ஐநாவின் யூஎன்ஆர்டபிள்யூஏவை சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
The post இஸ்ரேல் தாக்குதலில் 15 பாலஸ்தீனிய மருத்துவர்கள் பலி appeared first on Dinakaran.