இஸ்ரேலில் இருந்து மேலும் 268 இந்தியர்கள் நாடு திரும்பினர்...!

1 week ago 3

டெல்லி,

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது. ஈரான் மீது இஸ்ரேல் போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதேபோல், இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல் நடத்திய நிலையில் அந்த அணு உலைகள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதன் காரணமாக ஈரான், இஸ்ரேலில் வசித்து வரும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இந்தியாவை சேர்ந்த பலரும் இஸ்ரேலில் தங்கி கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு ஈடுபட்டு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இஸ்ரேலில் இருந்து ஏற்கனவே 161 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து மேலும் 268 இந்தியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இஸ்ரேலில் இருந்து எகிப்து அழைத்து செல்லப்பட்ட இந்தியர்கள் அந்நாட்டின் ஷரம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் இந்தியா புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று மதியம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். டெல்லி வந்தடைந்தவர்களை அதிகாரிகள், உறவினர்கள் வரவேற்றனர்.

Read Entire Article