டெல்லி: இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக அந்தமான் பகுதியில் மே இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இவ்வாண்டு 2 வாரம் முன்னதாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 10 நாட்கள் முன்கூட்டியே மே 13-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
The post இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.