‘இவன்தான் அந்த சார்’ என்ற பதாகைகளை ஏந்தி முழக்கம்: எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் பதிலடி!!

3 weeks ago 5

சென்னை: சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் ‘இவன்தான் அந்த சார்’ என்ற பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரை தவிர்த்து மற்றொரு சார் தொடர்பில் இருப்பதாகவும், அந்த சார் யார் என கண்டறிய வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், யார் அந்த சார்? என்ற பதாகைகளுடன் மக்கள் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் யார் அந்த சார் பேட்ஜுடன் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே அண்ணா நகரில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக பிரமுகர் சுதாகர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுதாகரின் புகைப்படத்தை காட்டி, ‘இவன் தான் அந்த சார்’ என்ற வாசகத்துடன் துண்டு சீட்டு கொடுத்து திமுகவினர் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ’யார் அந்த சார்?’ ‘இவன் தான் அந்த சார்’ என நோட்டீஸ் காண்பித்து கோஷம் எழுப்பினர்.

திமுக உறுப்பினர்கள் காண்பித்த அந்த நோட்டீஸ்சிலும், அதிமுக பிரமுகர் சுதாகர் புகைப்படம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘யார் அந்த சார்? இவன் தான் அந்த சார்’ என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தினமும் கருப்பு சட்டை அணிந்து வருகின்றனர். விடை தெரியாமல் இருந்த அதிமுகவினருக்கு விடை தெரிவிப்பதற்கே பதாகை ஏந்தி வந்துள்ளோம். திமுக உறுப்பினர்களாக நாங்கள் இவன் தான் அந்த சார் என்று காட்ட வருகை தந்துள்ளோம். ஆட்சியாளர்களும், விசாரணை அதிகாரிகள் மீது குறுக்கீடு செய்வது போல் அதிமுக நடவடிக்கை இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.

The post ‘இவன்தான் அந்த சார்’ என்ற பதாகைகளை ஏந்தி முழக்கம்: எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் பதிலடி!! appeared first on Dinakaran.

Read Entire Article