இளையான்குடி அருகே தடுப்பணை கட்டக்கோரி கலெக்டரிடம் மனு

1 month ago 5

சிவகங்கை, நவ.19: இளையான்குடி அருகே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. குணப்பனேந்தல் பீட்டர் அலங்கார தம்புராஜ் மற்றும் கிராமத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இளையான்குடி தாலுகா குணப்பனேந்தல் கண்மாய்க்கான வரத்து கால்வாய் வைகை நாட்டார் கால்வாயில் இருந்து பிரிகிறது. வரத்துக் கால்வாயில் நீர் செல்வதற்கான தடுப்பணை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது.

கடந்த 2022-23ம் ஆண்டு இப்பகுதியில் பாலம் புனரமைத்தல் பணி நடைபெறும்போது தடுப்பணை அகற்றப்பட்டது. இதனால் கண்மாய்க்கு நீர் செல்வது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் 74 ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இளையான்குடி அருகே தடுப்பணை கட்டக்கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article