இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்த 27 வயது பெண் கைது

3 months ago 25

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து ஹனி டிராப் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

28 வயதான ஜோய் ஜமீமா என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார். பணக்கார இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வீட்டுக்கு வரவழைத்து போதை வஸ்து கொடுத்து, ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கைதான ஜோய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் செயல்பாட்டினை விளக்கிய காவல்துறை ஆணையர் ஷங்கபிரதா பாக்சி, "ஆண்களை, குறிப்பாக பணக்கார ஆண்களை, சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது சில ஆதாரங்கள் மூலமாகவோ ஜோய் ஜமீமா அணுகினார். பின்னர் அவர்களுடன் நட்பு வைத்து காதல் என்ற பெயரில் ஏமாற்றி வந்திருக்கிறார். அவர்களின் சந்திப்பின் போது, அந்த பெண் சில மயக்க மருந்து கலந்த பானங்களை கொடுத்து, அதன் பிறகு அவளது கூட்டாளிகளான ஒரு கும்பல் செயலில் இறங்குகிறது. பின்னர் அந்த கும்பல் பெண் மற்றும் ஆண்களின் தனிப்பட்ட படங்களை எடுத்து, அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதாகவோ அல்லது அவர்களது உறவினர்களுக்கு அனுப்புவதாகவோ மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது" என்று அவர் கூறினார்.

Read Entire Article