“இளைஞர்களிடையே பக்தி குறைந்ததால் தான் பருவம் தவறிய மழை தமிழகத்தில் பொழிகிறது” - மதுரை ஆதீனம் 

3 months ago 18

மதுரை: “தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழை பொழிவதற்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம்,” என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு மதுரை ஆதீனம் இன்று (அக்.16) மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். இளைஞர்களும் விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Read Entire Article