இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்துக்கு தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

6 hours ago 2

சென்னை: காவல் துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். திருப்புவனம் அருகே காவலாளி அஜித் குமார் காவல் நிலையிலத்தில் போலீசார் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அஜித் குமாரின் தாயார், சகோதரரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அரசின் நிவாரணங்களை உடனடியாக கிடைக்க ஏறு்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் அஜித் குமாரின் தாயார், சகோதரனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாக அஜித்தின் தாயார் பேசுகையில்; முதல்வர் எங்களிடம் வருத்தம் தெரிவித்தார். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார் என தெரிவித்துள்ளார்.

The post இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்துக்கு தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article