இளம்பெண்ணுடன் உல்லாசம்: வீடியோ வெளியிட்ட என்ஜினீயர் கைது

6 months ago 17

கடையநல்லூர்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை என்ஜினீயர் ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பியதால் சிக்கி உள்ளார்.

என்ஜினீயரான முசாபுதீன் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு திருமணமான 30 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இவற்றை அந்த பெண்ணுக்கு தெரியாமல் முசாபுதீன் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

இருவரும் அடிக்கடி சந்திக்கும் விஷயம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரியவந்தது. இதனால் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் முசாபுதீனுடன் பேசுவதை அந்த பெண் நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முசாபுதீன், அந்த பெண்ணுடன் தனிமையில் இருக்கும் வீடியோவை, அந்த பெண்ணின் உறவினருக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முசாபுதீனை கைது செய்தனர்.

Read Entire Article