இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது

8 hours ago 1


கடலூர் மாவட்டம், சேடப்பாளையம் நாகம்மாள்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சம்பத் (வயது 28). இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியன் தமிழ்நாடு காவல் சிறப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு நெல்லையில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கின் போது மீட்பு பணிக்கு சென்றிருந்தார்.

அப்போது நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய நெல்லையை சேர்ந்த 28 வயது பெண்ணுடன், சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பியதும், இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனர். இதற்கிடையே கடந்த 28.12.2024 அன்று சம்பத், அந்த இளம்பெண்ணை கடலூர் அழைத்து வந்தார். பின்னர் கடலூரில் உள்ள விடுதியில் 4 நாட்கள் தங்க வைத்து ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு அந்த இளம்பெண் சம்பத்தை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்ய கூறியபோது, அவர் மறுத்துவிட்டார். மேலும் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த இளம்பெண், கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article