இளநரையை கருமையாக்க..!

3 months ago 12

நன்றி குங்குமம் தோழி

*தேங்காய் எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து, அதனை தலையில் நன்கு மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊறியபின் நன்கு அலசினால் நரை முடி மறைய ஆரம்பிக்கும்.

*நெல்லிக்காயை நறுக்கி வெயிலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊறவிட்டு, அந்த எண்ணெயை லேசாக சூடேற்றி, தலை முடியின் வேர்க் கால்களில் படும்படி நன்கு தேய்த்து வந்தால் நரைமுடி மறையும்.

*கறிவேப்பிலையில் மோர் கலந்து, மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல் செய்து, அதனை முடியின் வேர்களில் நன்கு தடவி அரைமணி நேரம் ஊறிய பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதை வாரம் இருமுறை செய்து வந்தால் நரைமுடி காணாமல் போகும்.

*வெந்தயத்தை முதல் நாளிரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த தண்ணீரால் தலைமுடியை அலசி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

*நெல்லிக்காய்ப் பொடி, தான்றிக்காய்ப் பொடி, மருதாணிப்ெபாடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணிப் பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி இவற்றை தலா 10 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டுக் கொதிக்க வைத்து, இக்கலவையை 4 நாட்கள் வெயிலில் வைக்கவும். பின்பு வெள்ளை துணியில் வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாகும்.

*பூந்திக்காய், வெந்தயம், வேப்பிலை, ரோஜா இதழ், ஆரஞ்சு பழ தோல், மல்லிகைப்பூ, வெட்டிவேர், செண்பக மொட்டு, நெல்லிக்காய் சேர்த்து 100 கிராம் எடுத்துக் கொண்டு அனைத்தையும் நன்கு காயவைத்து அரைக்கவும். 100 கிராம் பொடியை 200 மி.லி. தயிரில் கலக்கவும். முதலில் தலையில் சிறிது நல்லெண்ணெய் தடவிக் கொண்டு, பின் இந்த ஹேர்பேக்கைத் தடவி 45 நிமிடங்கள் ஊறவைத்து பின் அலசவும். இந்த பேக் இளநரை வராமல் தடுப்பதுடன் முடி உதிர்வையும் கட்டுப்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பையும், ஆரோக்கியத்தையும் தரும்.

தொகுப்பு: அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

The post இளநரையை கருமையாக்க..! appeared first on Dinakaran.

Read Entire Article