இலை புள்ளி நோய்களை கட்டுப்படுத்தி நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறலாம்

3 months ago 23

தஞ்சாவூர், செப். 29: நிலக்கடலை சாகுபடியில் இலை புள்ளி நோய்களை பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
விதையை ஒரு குழிக்கு ஒரு விதைவீதம் ஊன்ற வேண்டும். விதைக்கும் கருவிகள் கொண்டு விதைக்கலாம். 60 சென்டிமீட்டர் இடைவெளியில் 10 மீட்டர் முதல் 20 மீட்டர் அளவிற்கு படுக்கைகள் அமைக்கவும். தலைச்சத்து மற்றும் மணி சத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து அடியுரமாக 50% 20 நாளில் 25 மற்றும் 45 ம் நாளில் 25 சதவீத அளிக்க வேண்டும். மேலும் தமிழக வேளாண்மை துறையின் நிலக்கடலை நுண்ணூட்ட கலவையை அடியூரத்துடன் ஏக்கருக்கு 5 கிலோவினை ஊட்டம் ஏற்றிய தொழு உரத்துடன் கலந்து அளிக்கலாம். செடிக்கு செடி பத்து சென்டி மீட்டர் வரிசைகளுக்கு இடையே 30 சென்டிமீட்டர் இடைவெளி விட வேண்டும். உயிர் பூஞ்சான கொல்லிகள், உயிர் உரங்கள் ஆகியவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவிலும் முறையிலும் பயன்படுத்தி விதையை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதை உடன் 4 கிராம் ட்ரைகோடெர்மா விரிடி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். உயர் உரங்களான ரைசோபியம் ஏக்கருக்கு 29 மில்லி லிட்டர் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 100 மில்லி லிட்டர் உயிர் உரங்களை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு திறம் அல்லது மான்கோசெப் போன்ற பூஞ்சான கொல்லிகளை 4 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். உயர் உரம் மற்றும் ட்ரைகோ டெர்மா விரிடியுடன் இதை நேர்த்தி செய்ய விதிகளை பூஞ்சான கொல்லியுடன் கலக்க வேண்டும்.

விதைத்த 20 மற்றும் 40 ம் நாளில் களையெடுக்க வேண்டும். களை எடுத்தபின் விதைத்த 40 முதல் 45 ம் நாளில் மண் அமைக்க வேண்டும். இது நிலக்கடலையில் முக்கிய மேலாண்மை நடவடிக்கையாகும். இதன் மூலம் விழுதுகள் எளிதில் மண்ணில் ஊடுருவி காயின் வளர்ச்சிக்கு உதவும். ஒரு ஏக்கருக்கு 160 கிலோ வீதம் விதைத்த 40லிருந்து 45 வது நாளில் பாசன பயிருக்கும் 40லிருந்து 75 வது நாளில் மானாவாரி பார்க்கும் மண்ணை கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். நிலக்கடலையில் ஜிப்சம் இடுவதால் மண் இலகுவாகி நீர் பிடிக்கும் திறன் காற்றோட்டம் ஆகியவை மேம்பட்டு மண்வளம் பெருகும். நிலக்கடலை காய்களின் பருப்பு வளர்ச்சி மற்றும் நல்ல வளர்ச்சி அடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு உதவும். விதைத்த நாள் அல்லது ஐந்து நாட்களில் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 20 நாட்களுக்குப் பின் பூக்கும் பருவத்தில் இருமுறையும் காய் உருவானதின் போது விதைத்த 60 நாட்களில் ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். தெளிப்பு நீர் பாசனம் 30% வரை நீரை சேமிக்க உதவும்.

கோடை காலத்தில் நிலத்தை உளவு செய்து கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். நிலத்தை கலைகளின்றி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும். இளம் புழுக்களை கைகளால் சேகரித்து அழிக்கலாம். விளக்கு பொரியை மூன்றிலிருந்து நான்கு வீதம் அமைத்து அந்த பூச்சியை கவர்ந்து அளிக்கலாம். விளக்கு பொறி வைத்திருக்கம் பகுதியில் முட்டை குவியலை சேகரித்து அழிக்கலாம். வயலைச் சுற்றிலும் உப்பு செண்டி மீட்டர் நீளம் மற்றும் 25 சென்டிமீட்டர் அகலம் இருக்கும் அளவிற்கு குழிகள் அமைத்து அதன் மூலம் புழுக்களை அழிக்கலாம். அசாடிராக்டின் 600 மில்லி ஒரு ஏக்கருக்கு தெளிக்கவும். இலை புள்ளி நோய்களை பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். உயிரியல் கட்டுப்பாடு காரணிகளுடன் விதை நேர்த்தி செய்தும் கட்டுப்படுத்தலாம். முந்தைய பயிர்களின் கழிவுகளை ஆழமாக உழவு செய்து நோய் பரப்பும் காரணிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post இலை புள்ளி நோய்களை கட்டுப்படுத்தி நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறலாம் appeared first on Dinakaran.

Read Entire Article