இலுப்பூரில் சிறுவர் அணி கிரிக்கெட் போட்டி

2 weeks ago 3

இலுப்பூர், ஜன.21: இலுப்பூரில் பொங்கலை முன்னிட்டு இலுப்பூர் கோட்டை தெரு கேசிசி சிறுவர்கள் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இலுப்பூர் பிடாரி அம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இலுப்பூர், மாத்தூர், விராலிமலை, கீரனூர், அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து 14க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு ரூ 7,001 இலுப்பூர் கேசிசி அணிக்கும், இரண்டாம் பரிசு ரூ 5,001 ஒடுக்கூர் அணிக்கும், மூன்றாம்பரிசு ரூ.3,001 கல்குடி அணிக்கும், நான்காம்பரிசு ரூ.2,001 மற்றொரு கேசிசி அணிக்கும் வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை கோட்டைதெரு கேசிசி சிறுவர்கள் அணியினர் செய்திருந்தனர்.

The post இலுப்பூரில் சிறுவர் அணி கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article