இலவச வீட்டுமனை பட்டா கோரி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

1 month ago 12

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே பாண்டறவேடு காலனியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள 4 ஏக்கர் காலி இடத்தில் வீடுகள் கட்டிக்கொண்டு 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா தரக்கோரி அப்பகுதி தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்திருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் குடியிருக்கும் இடத்தின் பட்டாவானது தனிநபரின் பெயரில் இருப்பதாகவும், அதனால், இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடியாது என்றும் வருவாய்த்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.

இந்தநிலையில், கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டங்களில் தனி நபர் மீது பட்டா இருந்தும், பல ஆண்டுகளாக நிலத்தை உரிமை கோராமல் இருக்கும் நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு வசிப்பவர்கள் குறித்து தாசில்தார்களிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.

The post இலவச வீட்டுமனை பட்டா கோரி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Read Entire Article