தஞ்சாவூர், ஜன.22: மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்களின் அன்றாட தேவைகளை அவர்களே பூர்த்தி செய்திட இணைப்பு சக்கரங்கள் பொடுத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர், சிறப்பு சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கிடும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சார்ந்த ஒரு கால் மற்றும் இரு கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள தகுதியான மாற்றுத்திறன் முன்னாள் படைவீரர்கள் (அல்லது) அவர்களை சார்ந்தோர்கள் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக பெட்ரோல் ஸ்கூட்டர்,
சிறப்பு சக்கர நாற்காலிகள் இலவசமாக வேறு துறைகளிலிருந்து பெறாத நிலையில், அவ்வுபகரணங்கள் பெற்றி தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-230104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post இலவச பெட்ரோல் ஸ்கூட்டர் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.