
கொலும்பு,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மதுரையில் நடந்துவந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
தற்போது பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது அங்கு கூடி இருந்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கை கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
https://x.com/ThanthiTV/status/1899104879492342160