இலங்கையில் 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி: 30 பேர் காயம்

1 day ago 3

கொழும்பு: இலங்கையில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். இலங்கையில் தெற்கு யாத்திரை தலமான கதிர்காமத்தில் இருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு மாநில அரசின் பேருந்து ஒன்று 75 பயணிகளுடன் நேற்று புறப்பட்டு சென்றது. மத்திய மாகாணத்தின் கோட் மலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 20 பேர் மட்டுமே பயணிக்க கூடிய பேருந்தில் அதிகளவு பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

The post இலங்கையில் 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி: 30 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article