இலங்கை தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் ஹேக் குறித்து சேத்துப்பட்டு போலீஸ் தீவிர விசாரணை..!!

6 months ago 16

சென்னை: இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டது குறித்து சேத்துப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் ஆணையராக இருப்பவர் துரைசாமி வெங்கடேஸ்வரன். இவரது வாட்ஸ் அப் செயலியை நேற்று மாலை மர்ம நபர்கள் ஹேக் செய்திருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம்.

சேத்துப்பட்டில் உள்ள காவல் நிலையத்துக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் செயலி ஹேக் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இலங்கை தூதரக ஆணையரின் வாட்ஸ் அப் ஹேக் குறித்து சேத்துப்பட்டு போலீஸ் தீவிர விசாரணை..!! appeared first on Dinakaran.

Read Entire Article