இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 50 பேர் விடுதலை

1 month ago 13

சென்னை

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 18 மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 13 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார். இரண்டாவது முறையாக சிறை பிடிக்கப்பட்ட மீனவர் ஒருவருக்கு 18 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதேபோல் கடந்த செப்டம்பர் 21 அன்று நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்..

இந்த 37 மீனவர்களின் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன், 37 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.விடுதலை செய்யப்பட்ட 50 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தியா - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Read Entire Article