இலங்கை கடற்படை கைப்பற்றிய தமிழக மீனவர்களின் 74 படகுகளை கடலில் மூழ்கடிக்க முடிவு

1 month ago 10

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை அந்நாட்டு மீன்வளத் துறை கடலில் மூழ்கடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை கடற்படையினரால் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 2024-ம் ஆண்டு வரையிலும் இலங்கை நீதிமன்றங்கள் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 180 படகுகளை நாட்டுடமையாக்கி உள்ளன. மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினால், சிறை தண்டனைக்கு பிறகும் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

Read Entire Article