சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்கள் மற்றும் 199 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து இன்று (அக்.24) அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், 2 இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்.23-ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவது குறித்து நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தேன்.