இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க ஒப்பந்தம்: செல்வப்பெருந்தகை கருத்து

19 hours ago 2

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்தி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது அட்டூழியம் செய்துள்ளனர். தமிழக மீனவர்களின் பிரச்னைக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அனைத்து மீனவர்களும் நன்கு அறிவர். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் எடுத்த முயற்சியின் விளைவாக இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், தமிழக மீனவர்கள் பின்பற்றுகிற இழுவலை மீன்பிடி முறையை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சிக்கு வந்தது. கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகப்பெரிய வல்லரசாக இருக்கிற இந்தியா சின்னஞ்சிறிய நாடான இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளோடு மீன்பிடிக்கிற உரிமையை பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் ஒப்பந்தத்தை போட வேண்டும்.

The post இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க ஒப்பந்தம்: செல்வப்பெருந்தகை கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article