இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 98 மீனவர்களை விடுவித்து தாயகம் கொண்டு வர அரசு நடவடிக்கை : மீன்வளத்துறை

2 weeks ago 3

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இதில் மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில்,

*2023-24ம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த மீன் உற்பத்தி 8.84 லட்சம் மெட்ரிக் டன். இதில் கடல் மீன் உற்பத்தி மட்டும் 6.37 லட்சம் மெட்ரிக் டன். 1.34 லட்சம் மீன் மற்றும் மீன் உணவு பொருட்களின் ஏற்றுமதி மூலம் 6854 கோடி அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது

*2021ம் ஆண்டு முதல் 27.3.2025 வரை இலங்கை கடற்படையால் 1383 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வரசின் சீரிய முயற்சிகள் காரணமாக 1287 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பி உள்ளனர்.

*இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் மீதம் உள்ள 98 மீனவர்களையும், 229 மீன் பிடி படகுகளை விடுவித்து தாயகம் கொண்டு வர அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

*தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் 2024-25ம் ஆண்டில் பிப்ரவரி 2025 முதல் ரூ.1.04 கோடி மதிப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன் உணவு விற்பனை செய்ததில் ரூ.8.79 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

*470.60 டன் மீன்கள் விற்பனை செய்யபட்டதில் ரூ.14.60 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இணையதளம் மூலம் 9.78 டன் மீன்கள் ரூ.61.30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

The post இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 98 மீனவர்களை விடுவித்து தாயகம் கொண்டு வர அரசு நடவடிக்கை : மீன்வளத்துறை appeared first on Dinakaran.

Read Entire Article