இலங்கை அதிபர் அனுரா புத்தகயாவில் பிரார்த்தனை

4 weeks ago 7

கயா: பீகாரில் உள்ள புத்த கயாவில் இலங்கை அதிபர் திசநாயக்க நேற்று பிரார்த்தனை செய்தார். இலங்கை அதிபரான அனுரா குமார திசநாயக்கே 3 நாள் அரசு முறை பயணமாக ஞாயிறன்று இந்தியா வந்தார். அதிபராக பதவியேற்ற பின்னர் அவர் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இதனை தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக தனது பிராந்தியத்தை பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து அதிபர் திசநாயக்க நேற்று பீகார் மாநிலத்திற்கு சென்றார்.

கயா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அதிபர் திசநாயக்கவை மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். இதனைதொடர்ந்து சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த யுனெஸ்கோ பாரம்பரிய தளம் மற்றும் புத்தரின் வாழ்க்கை குறிப்பாக அவர் ஞானமடைவதற்கு தொடர்புடைய முக்கிய நான்கு புனித தலங்களில் ஒன்றான மகாபோதி கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். புத்தர் ஞானம் பெற்றபின் தனது முதல் வாரத்தை கழித்த போதி மரத்தின் வழித்தோன்றலாக கருதப்படும் புனித போதி மரத்தின் கீழ் பூக்களை தூவி பிரார்த்தனை செய்தார்.

The post இலங்கை அதிபர் அனுரா புத்தகயாவில் பிரார்த்தனை appeared first on Dinakaran.

Read Entire Article