ஈரோடு, ஜன.17: காணும் பொங்கலையொட்டி, ஈரோட்டில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தொடர்ந்து 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. 3வது நாளான நேற்று காணும் பொங்கலாகவும், கரிநாளாகவும் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. 1 கிலோ ஆட்டு இறைச்சி ரூ. 750 முதல் ரூ.840 வரையிலும், கறிக்கோழி ரூ.200ம், நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ. 550 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் இறைச்சி கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. இதேபோன்று, ஸ்டோனி பிரிட்ஜ், கருங்கல்பாளையம் மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஜிலேபி ரூ.140, நெய்மீன் ரூ.150, கொடுவாய் ரூ.250, ரூ. கட்லா ரூ. 200, லோகு ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. காணும் பொங்கலையொட்டி, இறைச்சி மற்றும் மீன் வியாபாரம் அமோகமாக நடந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.