இறுதிச் சடங்கு உதவித்தொகை வழங்க லஞ்சம்: வட்டாட்சியர் உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை - உதகை நீதிமன்றம்

3 months ago 14

உதகை: இயற்கை மரண இறுதிச் சடங்குக்கான உதவித்தொகையை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் குந்தா தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன், இவர் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். உதகை நொண்டிமேடு பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், இவருடைய தந்தை ஆலுகுட்டி இயற்கை மரணம் அடைந்தார். இதனால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும் இறுதி சடங்கு செலவு உதவித்தொகை வாங்குவதற்காக, குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில், நாராயணன் விண்ணப்பம் கொடுத்தார் .

Read Entire Article