இறுதி பட்டியலை வெளியிடும் த.வெ.க. தலைவர் விஜய்... கடைசி நேரத்தில் செய்த மாற்றம்

3 hours ago 1

சென்னை,

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது. தற்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை விஜய் முழு வீச்சில் செய்து வருகிறார்.

இதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் படிப்படியாகக் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 95 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இன்று 6வது கட்டமாக இறுதிக் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிடுகிறார். பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தும் நிலையில், அதன் பிறகே இறுதி மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 120ல் இருந்து 140ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read Entire Article