தேவையான பொருட்கள்
இறால் – 1/4 கிலோ
பூண்டு – 10 பல்
ரோஸ்மேரி இலை – ஒரு பிடி
ஃபிரெஷ் கிரீம் – 1 கப்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை
இறாலை நன்கு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கழுவ வேண்டும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் இறாலை சேர்த்து வதக்கவும். மிளகுத் தூள் சேர்க்கவும். பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். ரோஸ்மேரி இலை போட்டு வதக்கவும். பிறகு ஃபிரெஷ் கிரீம் சேர்த்து அனலை குறைத்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். காய்ந்த மிளகாயை இடித்து சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு ஊற்றி அடுப்பை அணைக்கவும். சுவையான இறால் கிரீம் மசாலா
The post இறால் கிரீம் மசாலா appeared first on Dinakaran.