இர்பான் மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

3 weeks ago 4

சென்னை: சென்னை ஜாபர்கான்பேட்டை சுந்தரமூர்த்தி தெருவில் புதிய 250 கிலோ வோல்ட் மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, புதிய மின்மாற்றியை மக்களை பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இர்பான் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்பான் வெளிநாட்டில் இருக்கிறார், நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர் வந்த பிறகு அதற்கான பதில் பெறப்படும். சம்பந்தப்பட்ட யூடியூபர் மற்றும் மருத்துவமனையின் மீது டிஎம்எஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்வார்கள். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இர்பான் மீதும் சட்ட ரீதியான, துறை ரீதியான நடவடிக்கைகள் தொடரும். பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழப்பை தவிர்க்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி கொடுக்கப்பட்ட பிறகு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரசவத்தின் போது குழந்தைகள், தாய்மார்கள் உயிரிழப்பது மிகப்பெரிய அளவில் குறைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான பிரசவங்கள் சுகப்பிரசவமாக இருக்கிறது. அனைத்து மாவட்டங்களும் இந்த இலக்கை எட்ட மருத்துவர்களை அறிவுறுத்தி வருகிறோம்.

The post இர்பான் மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article